(video)
இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசரின் தனி விமானம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்த அவருக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார், அதன் பின்னர் அவரது தனி விமானம் டெல்லி பாலம் விமான நிலையத்தின் டெக்னிக்கல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த விமானத்தில் உள்ள வசதிகள் பிரமிக்க வைக்கிறது. அட்டகாசமான மெஜந்தா வர்ணத்தில் விமானத்தின் உள்பகுதி ஆழகாக இன்டீரியர் டெக்கரேஷன் செய்யப்பட்டுள்ளது.
விமானம் முழுவதுமே குஷன் ஷோபாக்கள் போடப்பட்டுள்ளன. விமானத்தில் இளவரசர் உறங்குவதற்கு என்றே பிரத்தியேக படுக்கை அறை உள்ளது. அதில் எல்.இ.டி டி.விக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விமானத்திலேயே சிறிய கிச்சன் உள்ளது. மேலும் உணவுப்பொருட்களை சேமித்து வைக்கவும், இளவரசர் உணவருந்துவதற்கும் பிரத்தேயக இடங்கள் உள்ளன.
இந்த வீடியோ தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.
The post அபுதாபி இளவரசரின் பிரமிக்க வைக்கும் சொகுசு விமானம் (video) appeared first on Sri Lanka Muslim.