துபையில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். மீண்டும் புதன்கிழமை (ஜூன் 28) காலை முதல் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.
ஒருவேளை திங்கட்கிழமை (ஜூன் 26) பெருநாள் தினமாக இருந்தால் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். சனிக்கிழமை (ஜூலை 1) முதல் மீண்டும் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.
துபை மெட்ரோ:
நேற்று வியாழன் (ஜூன் 22) முதல் திங்கள் (ஜூன் 26) வரை நள்ளிரவு 2 மணி (அடுத்த நாள் அதிகாலை) வரை சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
துபை டிராம்:
சனிக்கிழமை (;ஜூன் 24) காலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாள் அதிகாலை) வரை எதிர்வரும் வியாழன் (ஜூன் 29) வரை சேவை வழங்கும்
The post துபாயில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி appeared first on Sri Lanka Muslim.